Published : 16 Jun 2015 09:52 AM
Last Updated : 16 Jun 2015 09:52 AM

ஆஸ்திரியாவில் நடக்க உள்ள சர்வதேச இசை விழாவில் தமிழக கலைஞர்கள் பங்கேற்பு

ஆஸ்திரியாவில் நடக்கவுள்ள அனைத்துலக இசை விழாவில் தமிழக இசைக் கலைஞர்கள் முதல் முறையாக பங்கேற்று, நமது நாதஸ்வர இசை, வீணை இசை, பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றை வழங்க உள்ளனர்.

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் சைலெர்ஸ்பர்க் நகரில் ஆண்டுதோறும் அனைத் துலக இசை விழா நடைபெறுகிறது. இதில் உலகின் தலைசிறந்த இசை வல்லுநர்கள் பங்கு பெறுவதால் ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள். இந்த ஆண்டுக்கான இசை விழாவில் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். நாதஸ் வரக் கலைஞர் இஞ்சிக்குடி சுப்பிரமணியம் குழுவினரும், வீணை இசைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷும், பரதநாட்டியத்துக்கு ‘பத்மபூஷன்’ அலர்மேலுவல்லியும் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைக்கப் பட்டுள்ளனர்.

கலைஞர்களைத் தேர்ந்தெடுக் கும் பொறுப்பை தமிழக முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் இரா.நாகசாமியிடம் விழாக் குழுவினர் ஒப்படைத்திருந்தனர். அவர் சென்னை கிருஷ்ண கான சபா செயலர் பிரபு, சென்னை மதுரத்வனி நிறுவனர் ராமகிருஷ்ணன் ஆகியோரது உதவியுடன் மேற்கண்ட 3 கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்துள்ளார்.

நாகசாமியின் பரிந்துரைப்படி, நாதஸ்வர மங்கல இசையுடன் விழா வரும் ஜூலை 25-ம் தேதி தொடங்க உள்ளது. விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய இசையான நாதஸ்வர த்வனியும், ஜெயந்தியின் வீணை ஒலியும், அலர்மேலுவல்லியின் சலங்கையும் அனைத்துலக இசைக் கலைஞர்கள், ரசிகர் களைக் கவர இருக்கின்றன. இவ்விழாவில் தமிழ்க் கலைஞர்கள் பங்கேற்பதும், நமது பாரம்பரியக் கலையுடன் விழா தொடங்குவதும் இதுவே முதல்முறை. இது, உலகக் கலைஞர்கள் தமிழ்க் கலைக்கு அளிக்கும் பெரும் சிறப்பும் ஆகும். ஐரோப்பாவிலேயே மிக வும் புகழ்வாய்ந்ததும், எழில்மிகுந் ததுமான தேவாலயம் ஒன்றில் விழா தொடங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x