

காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் மற்றும் எழிச்சூரில் ரூ.31.66 கோடியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான துயில் கூடங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அலுவலக அறைகள், வேலைவாய்ப் புக்கு பதிவு செய்ய வருவோருக்கான காத்திருப்பு அறை, பதிவு செய்யும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.1.50 கோடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெய லலிதா திறந்துவைத்தார்.
நாகர்கோவில், சிவகங்கை, பெரம்பலூர், சேலம் ஆகிய இடங்களில் ரூ.6 கோடியில் கட்டப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடங்கள், மதுரை மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
தூத்துக்குடி, நாகையில் கப்பல் இயந்திர பொருத்துநர் தொழிற்பிரிவுக்கான பணிமனை கள், விருதுநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பற்ற வைப்பவர் தொழிற்பிரிவுக்கான பணிமனை கட்டிடம், மதுரையில் ஒருங் கிணைந்த தொழிலாளர் துறை வளாகம், கோவையில் சட்டமுறை எடையளவு ஆய்வக கட்டிடம், சிவகாசி யில் பட்டாசு தொழிற்சாலை தொழி லாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையக் கட்டிடம் என ரூ.13 கோடியே 65 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சிரமங்களைப் போக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் திருச்சி, சேலம், மதுரை, கோவை மாவட்டங்களிலும் 7,000 தொழி லாளர்கள் தங்கும் வகையில் 9 இடங்களில் துயில் கூடங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட் டம் தையூர் மற்றும் எழிச்சூரில் ரூ.31.66 கோடியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான துயில் கூடங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கள் ப.மோகன், எஸ்.சுந்தர்ராஜ், தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன். துறை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.