

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச் சையின் போது, தன் மனைவி இறப் பதற்கு காரணமான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நான்கு பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் வசிப்பவர் ராஜேஷ்குமார் (35). தன் வீட்டின் கீழ்பகுதியில் நகை கடை நடத்திவந்தார். இவரின் மனைவி டிம்பிள் (32). ராஜேஷ்குமார்- டிம் பிள் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 26 ம் தேதி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய் வதற்காக திருத்தணி, ஆலமரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் டிம்பிள் அனுமதிக்கப் பட்டார்.
அப்போது, அறுவை சிகிச்சை யின் போது, எதிர்பாராதவிதமாக டிம்பிள் இறந்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையின் தவ றான சிகிச்சையால்தான் தன் மனைவி இறந்தார் என்று கூறி, சம்பந்தப்பட்ட தனி யார் மருத்துவமனை மருத்து வர்கள் மூன்று பேர் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, ராஜேஷ் குமார் மற்றும் அவரது உறவினர் கள் டிம்பிளின் உடலோடு, மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரி கள் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் முடி வுக்கு வந்தது. டிம்பிளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு, பிறகு இறுதி சடங்கு செய்யப் பட்டது.
இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் விலகாமல், மிகுந்த சோகத் தில் இருந்து வந்த ராஜேஷ்குமார், “தன் மனைவியின் இறப்புக்குக் காரணமான தனியார் மருத்துவ மனை மருத்துவர்கள் அடியாட்கள் மூலம் தன்னை மிரட்டுவதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று விரிவாக நான்கு பக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு, வியாழக்கிழமை அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, ராஜேஷ் குமாரின் வீட்டில் குவிந்த அவரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், ’’டிம்பிள் மற்றும் ராஜேஸ்குமாரின் மரணத்துக்குக் காரணமான, தனியார் மருத்துவ மனை மருத்துவர்களை கைது செய்தால் மட்டுமே, ராஜேஷ் குமாரின் உடலை பிரேத பரிசோத னைக்கு அனுப்ப அனுமதிப்போம்” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட் டனர். காலை முதல், மாலை 5 மணி வரை நடந்த இந்த போராட் டத்தில், 4 மணியளவில், காந்தி சாலையில் மறியலிலும் ஈடுபட்ட னர் ராஜேஷ்குமாரின் உறவினர் கள்.
சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி ஆர்.டி.ஓ., பாண்டி யன், திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி., ராமேஸ்வரி, திருத்தணி தாசில் தார் உதயகுமார் உள்ளிட்டோர், ராஜேஷ்குமாரின் உறவினர்க ளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கிறோம் என உறுதி யளித்தனர். இதையடுத்து, ராஜேஷ் குமாரின் உடலை பிரேத பரிசோத னைக்கு அனுப்ப உறவினர்கள் அனுமதித்ததால், மாலை 5 மணி யளவில் ராஜேஷ்குமாரின் உடல் திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக் காக கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையான பி. ஆர். மருத்துவமனையின் மருத்து வர்களான ரகுராம்(65), அவரது மகனான மருத்துவர் கிரண் (35) ஆகிய இருவரிடம் வியாழக் கிழமை திருத்தணி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சூழலில், வியாழக் கிழமை மாலை மருத்துவர் ரகுராம் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.