‘நெஸ்லே தயாரிப்பு பால் பவுடரில் புழுக்கள், வண்டுகள்’: கோவை ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிப்பு

‘நெஸ்லே தயாரிப்பு பால் பவுடரில் புழுக்கள், வண்டுகள்’: கோவை ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிப்பு
Updated on
2 min read

நாடு முழுவதும் நெஸ்லேவின் ‘மேகி’ நூடுல்ஸ் விவகாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்க, கோவையில் விற்பனை செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பால்பவுடர் பாக் கெட்டில் லார்வா புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமானந்த். கால் டாக்ஸி உரிமையாளர். இவரு டைய மனைவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டைக் குழந்தை பிறந் துள்ளது. குழந்தைகளுக்காக கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோவை ராமநாதபுரத்தில் உள்ள பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நெஸ்லே நிறுவனத்தின் பால்பவுடர் டின் வாங்கியுள்ளார். டின்னில் இருந்த பவுடரை கலந்து முதல் குழந்தைக்கு கொடுத்துள்ளார் பிரேமானந்தின் மனைவி. இரண் டாவது குழந்தைக்கு அதை கொடுக்க முற்படும்போது கலக்கப் பட்ட பாலில் கருப்பு, வெள்ளையில் புழுக்கள் மிதப்பதை பார்த்தார். உடனே அந்த டின் பாக்கெட்டில் பொறிக்கப்பட்டிருந்த இலவச தொலைபேசி எண்ணில் தகவல் கூறியுள்ளார் பிரேமானந்த். அவர் களும் அடுத்தநாள் நேரில் வந்து பரிசோதிப்பதாக தெரிவித்துள் ளனர்.

இதற்கிடையே, பால்பவுடர் புகட்டிய குழந்தைக்கு திடீரென தோளில் ஏதோ புள்ளிகள் போல தோன்ற, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அதற்கு சிகிச்சை யளித்த மருத்துவர்கள், பால்பவுடர் கரைசல் புகட்டியதால்தான் இது வந்ததாக சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து 19-ம் தேதி நெஸ்லே நிறுவன அலுவலர்கள் இவர்களை தேடி வந்துள்ளனர். பால்பவுடர் டின்னை பார்த்துவிட்டு, அதற்கு பதிலாக வேறொரு டின்னை கொடுத்து, ‘இதை பயன்படுத் துங்கள். இந்த டின்னை நாங்கள் ஆய்வுக்கு கொண்டு செல்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பிரேமானந்த் ஒப்புக் கொள்ளவில்லை. ‘பால்பவுடரில் இந்த புழுக்கள் எப்படி வந்தது? இதன் மூலமாக என்ன பாதிப்பு என்று தெரிந்து கொள்ள வேண் டும். அதை விடுத்து, மாற்று டின் கொண்டு வந்து தர உங்களை அழைக்கவில்லை’ எனத் தெரி வித்துள்ளார். பதிலுக்கு அவர்கள் எங்கள் சோதனைக் கூடத்தில்தான் ஆய்வு செய்ய முடியும் எனக் கூறியுள்ளனர்.

அரசு உணவுப் பரிசோதனைக் கூடத்தில்தான் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரேமானந்த் உறுதியாகக் கூறியதால், அவர்கள் திரும்பிவிட்டனர்.

தொடர்ந்து, கோவையில் உள்ள அரசு உணவுப் பாதுகாப்பு பரிசோதனை மையத்தில் பால் பவுடர் மாதிரியை ஆய்வுக்கு கொடுத்துள்ளார் பிரேமானந்த். கடந்த மே 8-ம் தேதி அந்த மையம் அளித்த அறிக்கையில், ‘இந்த பால்பவுடர் சாப்பிடத் தகுதியற்றது. அதில் 22 லார்வா புழுக்களும், 28 வண்டுகளும் உள்ளன’ என தெரி விக்கப்பட்டிருந்தது. இந்த விவரங் களை பிரேமானந்தின் வழக்கறிஞர் சுதீஷ் தெரிவித்தார்.

‘பால்பவுடரை உட்கொண்ட குழந்தைக்கு ஏதாவது சின்ன உடல் உபாதை என்றாலே பயம் தொற்றிக்கொள்கிறது. இப்படிபட்ட பால்பவுடரை விற்ற கடைக்காரர் மீதும், அதை தயாரித்த நெஸ்லே நிறுவனத்தின் மீதும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உத்தேசித்துள்ளோம்’ என்றார் பிரேமானந்த்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in