தருமபுரி இலக்கியம்பட்டி ஏரியை சுத்தம் செய்த பொறியாளர்கள்

தருமபுரி இலக்கியம்பட்டி ஏரியை சுத்தம் செய்த பொறியாளர்கள்
Updated on
1 min read

தருமபுரி இலக்கியம்பட்டி ஏரியை நேற்று மாணவர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் சுத்தம் செய்தனர்.

தருமபுரியில் சேலம் சாலையில் இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியால் விவசாய கிணறுகள், குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கான நீராதாரம் கிடைக்கிறது. இந்த ஏரி தூர்வாரப்படாமல் பாசி படர்ந்து காணப்படுகிறது. ஏரிக்கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மிகுந்து காணப் பட்டது.

இந்த ஏரியை தருமபுரி மக்கள் மன்றத்தினர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட வாழை அமைப்பினர் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட கணிணி பொறியாளர்கள் ஏரிக்கரையில் உள்ள கழிவுகளை அகற்றினர். இது குறித்து வாழை அமைப்பைச் சேர்ந்த அனந்த ராமன் கூறும்போது,

நம் தினசரி வாழ்வில் நாம் அறிந்தோ அறியா மலோ நீர் நிலைகளை மாசுப்படுத்தி வருகிறோம். இலக்கியம்பட்டி ஏரியை சுத்தம் பணியால் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, என்றார்.

தூய்மை பணியின் போது “அண்டை மாநிலத்திடம் நீரை கேட்கும் முன் நம் மண்ணின் நீர் நிலைகளை பாதுகாப்போம், மேகத்தை குளிர்விக்க ஏரியை பாதுகாப்போம்” என்கிற விழிப்புணர்வு தட்டிகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in