Published : 26 May 2014 09:54 AM
Last Updated : 26 May 2014 09:54 AM

சீனப் பொருள்கள் மீது தீவிர கண்காணிப்பு: சீனப் பட்டாசு வழக்கில் சி.பி.ஐ. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிவகாசியில் சீனப் பட்டாசுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து சீனா வில் இருந்து துறைமுகங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் அனைத்துப் பொருள்களையும் சுங்கத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுங்கத் துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் சீனப் பட்டாசு ஊடுருவல் குறித்து சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு 5-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்வேலன் வாதிட்டதாவது: சீனப் பட்டாசு தொடர்பாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கொடுத்த புகார் குறித்து விசாரித்து வரு கிறோம். இந்தியாவில் பல இடங் களில் சீனப் பட்டாசு குறித்து புகார் வந்துள்ளது.

சீனப் பட்டாசு சிவகாசியில்தான் பிடிபட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தகத் துறை இயக்குநர், சீனப் பட்டாசுகளை வெடிபொருளாகக் கருத வேண்டும் என ஏற்கெனவே சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்றார்.

சுங்கத் துறை வழக்கறிஞர் விஜய கார்த்திகேயன் வாதிடுகை யில், சீனப் பட்டாசு தொடர்பாக வெடிமருந்து கட்டுப்பாட்டுத் துறையின் எச்சரிக்கை கடிதத் தின் நகல் தூத்துக்குடி சுங்க அலுவலகத்துக்கு வரவில்லை. சீனப் பட்டாசு இறக்குமதிக்கு யாருக்கும் அனுமதி வழங்க வில்லை என்றார்.

தூத்துக்குடி துறைமுக சுங்கத் துறை உதவி ஆணையர் பரத்வாஜ் கூறும்போது, தூத்துக் குடி துறைமுகத்தில் கண்டெய்னர் களை சோதனையிட தற்போது காமா ஸ்கேனர் கருவி பயன்படுத் தப்படுகிறது. 2 மாதங்களில் எக்ஸ்ரே ஸ்கேனர் கருவி அமைக் கப்படும். அக்கருவி வந்தால் கண்டெய்னர்கள் துல்லியமாக சோதனையிடப்படும்.

சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பொருள்களையும் தூத்துக்குடி துறைமுகத்தில் தீவிர மாகக் கண்காணித்து வருகிறோம். கருப்புப் பட்டியல் நிறுவனங்களின் கண்டெய்னர்கள் முழுமையாக சோதனையிடப்படுகின்றன. சந்தேகம் ஏற்பட்டாலும் கண்டெய் னர்கள் சோதனைக்கு உள்படுத் தப்படுகின்றன என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் ஆனந்த முருகன், தமிழக போலீஸாரால் சீனப் பட்டாசு வழக்கை முழுமை யாக விசாரிக்க முடியாது. விசா ரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்றார்.

விருதுநகர் எஸ்.பி. கூறுகை யில், சீனப் பட்டாசு வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு, ஆயுதம் மற்றும் வெடிமருந்து சட்டத்தின் பிரிவு கள் சேர்க்கப்பட்டுள்ளன. குற்ற வாளிகள் இருவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன. 50 குடோன்களில் சோத னையிட்டுள்ளோம். அந்த குடோன்களில் சீனப் பட்டாசு சிக்கவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கின் விசாரணை எஸ்.பி.யின் நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண் டும். சிவகாசியில் பணிபுரியும் போலீஸாருக்கு வெடிமருந்து சட்டம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்த வழக்கில் மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப் படுகின்றனர். அவர்கள் புதன் கிழமை பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். சீனப் பட்டாசு தொடர்பாக இதுவரை மேற் கொண்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x