Published : 24 Jun 2015 11:02 AM
Last Updated : 24 Jun 2015 11:02 AM

சென்னை சென்ட்ரல் - டெல்லி கிராண்ட் டிரங்க் ரயில் ரத்து

சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்- 12615) இன்று ( 24.06.2015 ) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்படும் புதுடெல்லி - சென்னை சென்ட்ரல் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலும் (ரயில் எண்- 12616)-ம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை - டேராடூன் / சண்டிகர் (ரயில் எண்- 12687) சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் இந்த ரயில் இன்று ( 24.06.2015 ) இரவு 11.35-க்கு மதுரையில் இருந்து புறப்பட்டு நாளை காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து இன்று ( 24.06.2015 ) காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - பாட்னா இடையேயான சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x