

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் (42). குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஏஞ்சலின் (32). இவர்கள் இருவரும் கணவன், மனைவி போல நடித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெற விண்ணப்பித்து இருந்தனர்.
தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இவர் கள் தம்பதியாக நடித்து இருப்பதும், போலி ஆவணங் களை சமர்ப்பித்து இருப் பதும் தெரியவந்தது. இதைய டுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராயப் பேட்டை போலீஸார் இருவரை யும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல சென்னையில் உள்ள ஜெர்மனி தூதரகத்தில் போலி ஆவணம் மூலம் விசா பெற முயன்ற புதுச்சேரியை சேர்ந்த திலீப்குமார் என்பவரை அபிராமபுரம் போலீஸார் கைது செய்தனர்.