கோயம்பேடு - எழும்பூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் மார்ச்சில் நிறைவடையும்

கோயம்பேடு - எழும்பூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் மார்ச்சில் நிறைவடையும்
Updated on
1 min read

கோயம்பேடு - எழும்பூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் வரும் மார்ச் மாதத்தில் நிறைவடையும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையாகவும், 21 கி.மீ. தூரத்துக்கு (13 ரயில் நிலையங்கள்) உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உயர்மட்டப் பாதையில் பாதுகாப்பு சோதனை ஓட்டங்கள் முடிந்து, ரயில்களை இயக்க போக்குவரத்து ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே, மற்றொரு வழித்தடத்தில் கோயம்பேடு எழும்பூர் வரையில் சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘கோயம் பேட்டில் இருந்து எழும்பூர் வரை 8 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறை வடைந்துவிட்டன. ரயில் நிலையங் கள் அமைக்கும் பணிகள், ரயில் பாதைகள், சிக்னல்கள் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in