

குன்னூர் அருகேயுள்ள கிராமங் களில், குட்டியுடன் சிறுத்தை நடமாடி வருவதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர். பட்டாசு வெடித்து சிறுத்தையை வனத்தினுள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவை வனப் பகுதியை ஒட்டியுள்ளன. தேயிலைத் தோட்டங்களில் அடிக்கடி காட்டெ ருமை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகின்றன.
இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பசு மற்றும் கன்றுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. கடந்த இரு நாட்களாக குன்னூர் மோர்ஸ் கார்டன், கரோலினா பகுதிகளில் ஒரு சிறுத்தை, குட்டியுடன் நடமாடி வருவதை கண்டுள்ளனர். நேற்று முன்தினம் கரோலினா பகுதியில் ஒரு பாறையில் சிறுத்தை அமர்ந் திருந்ததை மக்கள் பார்த்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள கரோலினா பகுதியில், வனத்துறை யினர் சிறுத்தையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி மற்றும் பட்டாசுகளை வெடிக்கச் செய்து சிறுத்தையை வனத்தினுள் விரட்டும் பணியில் குன்னூர் சரகர் சிவா தலைமையில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.