Published : 04 May 2014 10:33 AM
Last Updated : 04 May 2014 10:33 AM

காரில் வெடிகுண்டுகளை சோதனை செய்யும் நவீன கருவி: சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பொருத்தப்படுகிறது

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், காரில் வெடிகுண்டு களை சோதனை செய்யும் ‘வெகிகிள் ஸ்கேனர்’ என்ற நவீன கருவி பொருத் தப்பட உள்ளது. சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணை யர் காந்தி இத்தகவலை தெரிவித்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் பலியானார். 14 பேர் காயமடைந் தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பிறகு சில தினங்களுக்கு மட்டும் இது போன்ற சோதனைகளை நடத்தினால் போதாது. நிரந்தரமாகவே இதுபோன்ற சோதனைகளை நடத்த வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.

“ரயில் நிலையங்களில் வைக்கப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நவீன தொழில்நுட்பத்துடன் இல்லை. நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதுடன் அவற்றை இயக்குப வர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். நவீன பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவ தற்கு அந்தந்த ரயில்வே பொதுமேலாள ருக்கே அதிகாரம் அளிக்க வேண்டும். மின்னணு தொழில்நுட்பத்தில் நாள்தோறும் நவீனத்துவம் புகுத்தப் பட்டு வரும் நிலையில், தற்போதைய தேவைக்கேற்ப ரயில் நிலையங்களில் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்படுவதில்லை. பாதுகாப்பு குறைபாடுகளில் இதுவும் ஒன்று” என்று பெயர் சொல்ல விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணை யர் காந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை

ரயில் நிலையங்களிலும், ரயில்களி லும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறோம். ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா, ‘டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்’, ‘லக்கேஜ் ஸ்கேனர்’, ‘வெகிகிள் ஸ்கேனர்’ ஆகியவற்றை பொருத்தி அவற்றை ஓரிடத்தில் இருந்து கண் காணிக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முதல்கட்டமாக தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கிய ரயில் நிலையங்களில் ‘டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்’, ‘லக்கேஜ் ஸ்கேனர்’ ஆகியவை பொருத்தப்பட்டு வருகிறது. சென்னை கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற் கரை, மாம்பலம், தாம்பரம், பேசின் பிரிட்ஜ், திருவள்ளூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை செயல்பாட்டில் உள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காரில் வெடிகுண்டு களை சோதனை செய்யும் ‘வெகிகிள் ஸ்கேனர்’ என்ற நவீன கருவி விரைவில் பொருத்தப்படவுள்ளது.

ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் தரைக்கு அடியில் இந்த ‘வெகிகிள் ஸ்கேனர்’ கருவி பொருத்தப்படும். காரின் அடிப்பகுதி யில் வெடிகுண்டு இருந்தால் இந்த கருவியின் உதவியுடன் அதை கண்டுபிடிக்க முடியும். காருக்குள் ளேயும், டிக்கியிலும் வெடிகுண்டு இருக் கிறதா என்பதை வழக்கமான சோதனை முறையில் தெரிந்து கொள்ளலாம்.

கூண்டு போன்ற வடியில் ‘லக்கேஜ் ஸ்கேனர்’ இருப்பதால் பேகை முழுவது மாக ஸ்கேன் செய்ய முடியும். ஆனால், வெகிகிள் ஸ்கேனரைக் கொண்டு காரின் அடிப்பகுதியை மட்டுமே “ஸ்கேன்” செய்ய முடியும்.

சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ‘வெகிகிள் ஸ்கேனர்’ தவிர ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டுவிட்டன. இந்த ரயில் நிலையங்களில் “வெகி கிள் ஸ்கேனர்” வாங்கிப் பொருத்த வதற்கான அனுமதியை ரயில்வே நிர்வாகம் அளித்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அவை பொருத்தப்படும். இவ்வாறு காந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x