

ஆட்சியர் அலுவலகத்தில் கமலின் விழிப்புணர்வு வீடியோ
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.சி.டி. டிவியில் தேர்தலையொட்டி கமல்ஹாசன் நடித்த, விழிப்புணர்வு படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.அதில் “நாம், நம் எதிர்காலத்தை எந்த வேட்பா ளரின் கையில் ஒப்படைக்கப்போகிறோம் என்பதை சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். ஒரு சிறு தொகைக்காக உங்கள் தன்மானத்தையும் எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள்” என பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.