நாளை தேரோட்டம்: காஞ்சியில் போக்குவரத்து மாற்றம்

நாளை தேரோட்டம்: காஞ்சியில் போக்குவரத்து மாற்றம்
Updated on
1 min read

காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. இதில், திருத்தேரோட்ட உற்சவம் 7-ம் நாளான நாளை நடைபெற உள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இதை யொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தேரோட்டம் முடியும் வரை நகருக்குள் பேருந்துகள் வந்து செல்ல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தடைவிதித்துள்ளார். அதேநேரம், பேருந்து சேவையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நகருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து அதில் பேருந்துகளை நிறுத்தி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகள் ஏனாத்தூர் வழியாக தாமல்வார் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். மீண்டும் பொன்னே ரிக்கரை வழியாக சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

வேலூரிலிருந்து, காஞ்சிபுரம் வரும் பேருந்துகள் ஒலிமுகம்மது பேட்டை சாலை சந்திப்பில் அமைக் கப்பட்டுள்ள பேருந்து நிலை யத்தில் நிறுத்தப்படும். மீண்டும் வெள்ளைகேட் வழியாக வேலூர் செல்லும். வேலூரிலிருந்து கல்பாக்கம் வரை செல்லும் பேருந் துகள், கீழம்பி பகுதியில் உள்ள புறவழிச்சாலையில், ஓரிக்கை மற்றும் பெரியார் நகர் வழியாக இயக்கப்படும்.

இதேபோல், அரக்கோணம் மற்றும் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகள், ஒலிமுகம்மது பேட்டை சாலை சந்திப்பில் நிறுத்தி இயக்கப்படும். வந்தவாசி, செய்யாரிலிருந்து, காஞ்சி நகருக்கு வரும் பேருந்து கள், தமிழ்நாடு குடியிருப்பு வாரிய அலுவலகம் அருகே நிறுத்தி இயக்கப்படும்.

செங்கல்பட்டிலிருந்து, காஞ்சிபுரம் வரும் பேருந்துகள், முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே களியனூர் வழியாக, பழைய ரயில் நிலையம் அருகே நிறுத்தி இயக்கப்படும். கல்பாக்கத்திலிருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் செய்யாறிலிருந்து, சென்னை செல்லும் பேருந்துகள், செவிலி மேடு பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் இயக்கப்படும். உத்திர மேரூரிலிருந்து, காஞ்சிபுரம் வரும் பேருந்துகள், ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி இயக்கப்பட உள்ளன.

இந்த போக்குவரத்து மாற்ற ங்கள் நகரில் நடைபெற உள்ள தேரோட்ட உற்சவம் முடியும் வரை அமலில் இருக்கும்.

தேர் பவனி வரும் சாலைகளில் பேருந்துகள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in