

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெற்றிச்செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட் டார்.
சென்னை மடிப்பாக்கம் அருகே மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தனிச்செயலாளராக இருந்தார். இவரை கடந்த 20-ம் தேதி ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணையில் வெற்றிச் செல்வனுக்கும், நீலாங்கரையில் வசிக்கும் அவரது அண்ணன் மகன் ஜெகன்நாதன் என்பவருக் கும் இடையே சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரண மாக கூலிப்படை மூலம் வெற்றிச் செல்வன் கொலை செய் யப்பட்டது தெரிந்தது. ஜெகன் நாதனை பிடிக்க முயன்றபோது அவர் தலைமறைவாகி விட்டார்.
கொலை செய்ததாக கூலிப் படை தலைவன் பெருமாள் உட் பட 5 பேர் ஏற்கெனவே கைது செய் யப்பட்டனர். ஜெகன்நாதனை பிடிக்க பெங்களூர் உட்பட பல பகுதிகளுக்கு போலீஸார் சென் றனர். நேற்று ஜெகன்நாதனை போலீஸார் கைது செய்தனர். அவரி டம் விசாரணை நடந்து வருகிறது.