

திருச்சி விமான நிலையத்தில் சுங்கவரி வசூலிப்பதில் நடை பெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிஐ குழுவினர், அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் விமான நிலையத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கவரி வசூலிப்பதில் முறை கேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக திருச்சி விமான நிலைய சுங்கக் கண்காணிப்பாளர்கள் ரவிக்குமார், சிவசாமி, ஆய்வாளர் கள் சுரேஷ்குமார், தினேஷ் பிரதாபட், அபிஜித் சக்ரவர்த்தி மற்றும் சுங்க வரி செலுத்தாமல் பொருளை எடுத்துச் செல்ல பணம் கொடுத்த நாகூர் மீரான் ஆகியோரை சிபிஐ போலீஸார் மார்ச் 6-ம் தேதி கைது செய்தனர். இந்த 6 பேரையும் சிபிஐ ஆய்வாளர் அப்துல்அஜிஸ் தலைமையிலான போலீஸார் மதுரை சிபிஐ நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், வழக்கு விசாரணைக்கான ஆவ ணங்களை சமர்ப்பிக்க வேண்டி யிருப்பதால், சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் தலைமையி லான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.