ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
Updated on
1 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண் ணப்படுகின்றன. இதையொட்டி, வாக்கு எண்ணும் இடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 28 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மொத்தம் 74.4 சதவீத வாக்குகள் பதிவா கின. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு மேல், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடக்கும் ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அனைத்து இயந்திரங்களும் வைக்கப்பட்ட பிறகு, அந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அறை முன்பு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் உட்பட 300 பேர் ‘ஷிப்ட்’ முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைப் பகுதியில் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து, பாதுகாப்பு அறையின் சீல் திறக்கப்பட்டு, அறையில் இருந்து சுற்று அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, அவற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் பணியில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் முன்னணி நிலவரம் தெரியவரும். பிற்பகலுக்குள் முடிவு தெரிந்துவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in