செட்டிநாடு குழும அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

செட்டிநாடு குழும அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
Updated on
1 min read

செட்டிநாடு குழும அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதி காரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

செட்டிநாடு குழும நிறுவனங் களின் கவுரவ தலைவர் எம்.ஏ.எம். ராமசாமிக்கும், அவரது வளர்ப்பு மகன் முத்தையா என்ற ஐயப்ப னுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தற்போது செட்டிநாடு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இருக் கும் ஐயப்பனுக்கும், எம்.ஏ.எம்.ராம சாமிக்கும் இடையே சொத்துக் களை கைப்பற்றுவதில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து நடந்த பிரச்சினைகளையடுத்து, ஐயப்பனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்ததை சட்டப்படி ரத்து செய்வதாக எம்.ஏ.எம்.ராமசாமி அறிவித்தார்.

இந்நிலையில், செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் நேற்று முன்தினம் காலை வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிமென்ட் ஆலை, மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிலையம், செட்டிநாடு சிலிகா நிறுவனம், கப்பல், ஜவுளி, ஸ்டீல், நிலக்கரி மற்றும் கட்டுமான நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரண் மனைகள், வீடுகள் உட்பட தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங் களில் 35-க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தப் பட்டது.

இரண்டாவது நாளாக நேற்றும் செட்டிநாடு குழும அலுவலகங்கள் மற்றும் குறிப்பிட்ட சில வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முதல் நாள் நடத்தப்பட்ட சோதனையில் சில இடங்கள் விடுபட்டதாகவும், அந்த இடங்களில் நேற்று சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், வருமான வரித் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குறிப்பிட்ட சில ஆவணங்களைத் தேடி 2-வது நாள் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in