Published : 11 Jun 2015 08:33 AM
Last Updated : 11 Jun 2015 08:33 AM

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: நிகழ்ச்சி பங்குதாரராக சிஐஐ தேர்வு

தமிழக அரசு நடத்தும் உலக முதலீட் டாளர்கள் மாநாட்டுக்கான நிகழ்ச்சி பங்குதாரராக இந்திய தொழில் கூட் டமைப்பு(சிஐஐ) தேர்வு செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் திறன் வாய்ந்த மனிதவளம், முதலீட்டுக்கு ஏற்ற சூழல் கட்டமைப்பு வசதி, உடனடி அனுமதி இவற்றின் அடிப்படையில் ஏற்கனவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய் துள்ளன.

இந்நிலையில், மேலும் பல நிறுவனங்களை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதலீட்டாளர்கள் கேட்டுக் கொண்டதால் தற்போது மாநாடு செப்டம்பர் 9,10 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. கண்காட்சி, முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர்கள் சந்திப்பு என பல்வேறு அம்சங்கள் மாநாட்டில் இடம் பெறுகின்றன.

இந்நிலையில், உலக முதலீட் டாளர்கள் மாநாட்டை நடத்துவதற் கான நிகழ்ச்சி பங்குதாரராக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) அமைப்பை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 37 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிறைந்த முன் அனுபவம், 106 நாடுகளில் உள்ள 312 அமைப்புகளுடன் தொடர்பு, பல்வேறு உலகளாகவிய நிகழ்ச்சிகளை தமிழகம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் நடத்திய அமைப்பு என்பதால் சிஐஐ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x