விஜயகாந்த் மைத்துனருக்கு பிடிவாரண்ட்

விஜயகாந்த் மைத்துனருக்கு பிடிவாரண்ட்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள், விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்துக்கு நெல்லை மாவட்ட விநியோக உரிமை பெற்றிருந்தார்.

இதில் ரூ.26 லட்சம் மாரியம்மாளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விஜயகாந்த், சுதீஷ் ஆகியோரிடம் பணத்தை திரும்ப கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டனராம். ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் மன்றத்தில் விஜயகாந்த் அவரது மைத்துனர் சுதீஷ் மீது மாரியம்மாள் மனு செய்தார்.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். வழக்கிலிருந்து விஜயகாந்தை விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நடை பெற்ற விசாரணைக்கு சுதீஷ் ஆஜர் ஆகாததால் நீதிபதி விசாரணையை ஜூலை 23-க்கு ஒத்திவைத்தார். ஏற்கெனவே இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத சுதீஷுக்கு 10.4.15-ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது.

27.5.15-ம் தேதி சுதீஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். மீண்டும் 11.6.15-ல் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சுதீஷ் ஆஜராகவில்லை. நேற்று நடைபெற்ற விசாரணைக்கும் அவர் ஆஜராக வில்லை. இதனால் இவர் மீது 2-வது பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in