மிளகாய்த் தூள், கத்தியுடன் சுற்றித் திரிந்த 9 பேர் கைது

மிளகாய்த் தூள், கத்தியுடன் சுற்றித் திரிந்த 9 பேர் கைது
Updated on
1 min read

ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு, போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத் துக்கு இடமான வகையில் 4 மோட்டார் சைக்கிள்களில் 9 இளைஞர்கள் சுற்றித் திரிந்தனர்.

அவர்களிடம் சோதனை யிட்டதில் 3 கத்திகள், மிளகாய் பொடி பாக்கெட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர்கள், செங்குன் றத்தைச் சேர்ந்த உதயகுமார், ஹரி,வாசு, கலீல் ரஞ்சித்குமார், சிவா, சிலம்பரசன், ராஜசேகர் மற்றும் சென்னை, வியாசர்பாடி- சர்மா நகரைச் சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது. ஊத்துக் கோட்டை பகுதிகளில் கொள்ளை யடிக்கும் நோக்கில் சுற்றித் திரிந்ததும் அம்பலமானது.

இதையடுத்து அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in