

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர் பாக நிர்வாகத்திடம் அங்கீகரிக் கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நெய்வேலி என்எல்சியில் பணி யாற்றும் தொழிலாளர் மற்றும் ஊழியர்களுக்கு 5 ஆண்டு கால ஊதிய மாற்று ஒப்பந்தம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி யுடன் முடிந்தது. 2012 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல் படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அமல்படுத் தாததால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொழிலா ளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தின. எனினும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, அங்கீகரிக்கப் படாத தொழிற்சங்கங்களான சிஐடியூ, ஐஎன்டியுசி உட்பட 11 தொழிற்சங்கங்களின் கூட் டமைப்பு சார்பாக நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்பு நோட் டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு என்எல்சி நிர்வாகம் நீதிமன்றத் தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றது. இந்த சூழ்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங் களான தொமுச, அண்ணா தொழி லாளர்கள் ஊழியர்கள் சங்கம் ஆகியவை நேற்று முன்தினம் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு செய்தன.
இதன் தொடர்ச்சியாக, தொமுச அலுவலகத்தில் இருந்து பொதுச் செயலாளர் ராஜ வன்னியன் தலை மையில் தலைவர் திருமாவளவன், அலுவலக செயலாளர் தரன், பொருளாளர் அண்ணாதுரை உள் ளிட்டோர் நேற்று மனிதவளத் துறை முதன்மை பொதுமேலாளர் முத்து விடம் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர். இதுபோல, அண்ணா தொழிலாளர்கள் ஊழி யர்கள் சங்கத்தினரும் செயலாளர் உதயகுமார் தலைமையில் சென்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
அனைத்து தொழிற்சங்கத்தின ரும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கி இருப்பதால் வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரி கிறது. இதுகுறித்து தொமுச பொதுச் செயலாளர் ராஜவன்னியன் கூறும்போது, “என்எல்சி நிறுவனம் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் செய்துவருகிறது. தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் ஜூலை 2-ம் தேதிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.