துபாய் விமானத்தில் கோளாறு சென்னையில் தரையிறக்கம்

துபாய் விமானத்தில் கோளாறு சென்னையில் தரையிறக்கம்
Updated on
1 min read

திருச்சியில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து துபாய்க்கு நேற்று காலை 5.30 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். விமானத்தை சென்னையில் தரையிறக்க அனுமதி கேட்டார். கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து காலை 6.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்த தால், 170 பயணிகளும் உயிர் பிழைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in