Published : 29 Jun 2015 08:32 PM
Last Updated : 29 Jun 2015 08:32 PM

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: இளங்கோவன் வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்த காலத்தில் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. சென்னை நகரம் நவீன நகரமாக உருவாவதற்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருப்பது மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

ஆனால், மெட்ரோ ரயில் கட்டணங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் ஆதர்ஷ் நகரில் இருந்து யமுனா நதி வரை உள்ள 17 கி.மீ. தொலைவுக்கு ரூ.19 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தென்படுகிறது.

கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கமே பாழாகிவிடும். மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் உடனடியாக கட்டணத்தைக் குறைக்க வேண்டும்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x