

அறிவியல், கணிதம் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான ‘நெட்’ தகுதித்தேர்வினை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பர்) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக் கான முதலாவது நெட் தேர்வு ஜூன் 21-ம் தேதி சென்னை, காரைக்குடி உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஆர் இணையதளத்தில் (www.csirhrdg.res.in) விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு இதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லாத பட்சத்தில் இரு புகைப்படங்களை தேர்வு மையத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று சிஎஸ்ஐஆர் முதுநிலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.