

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் கோனேரி ஆற்றுப்படுகையில் இரு பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வாலிகண்டபுரத்தில் புராதன சிறப்புமிக்க வாலீஸ்வரர் கோயில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலின் பின்புறமுள்ள கோனேரி ஆற்றுப்படுகையில் பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட செப்பு பொருட்களை சேகரிக்கும் நபர்கள் நேற்றுமுன்தினம், அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் கற்சிலையை கண்டெடுத்தனர். இதையடுத்து, அங்கு கைகள் சிதிலமடைந்து, நின்ற நிலையில் உள்ள காளி சிலையும் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சிலைகள் மீட்கப்பட்டு, வாலிகண்டபுரம் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.