Published : 13 Jun 2015 09:14 AM
Last Updated : 13 Jun 2015 09:14 AM

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் போதை எஸ்.ஐ. அத்துமீறல்: பேஸ்புக் மூலம் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்- ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு

திண்டுக்கல் அருகே ஓடும் பஸ்ஸில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவர் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரை ஆயுதப்படைக்கு மாற்றி திண்டுக் கல் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் சரவணன் உத்தரவிட்டுள் ளார்.

திண்டுக்கல் அருகே அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிபவர் லட்சுமணன். இவர், நேற்று முன்தினம் மதியம் திருச்சியில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ்ஸில் பயணம் செய் தார்.

பஸ்ஸில் 30 பயணிகள் இருந் துள்ளனர். பெரும்பாலான இருக் கைகள் காலியாக இருந்துள்ளன. ஆனால், சிறப்பு சார்பு ஆய்வாளர் லட்சுமணன், ஒரு பெண் தனியே அமர்ந்திருந்த இருக்கையில், அவரது அருகே அமர்ந்துள் ளார்.

அப்போது குடிபோதையில் தள்ளாடிய லட்சுமணன் பஸ் கிளம்பியதும் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். ஒரு கட்டத்தில் மற்றவர்களிடம் சொல்ல முடியாமலும், பொறுத்துக் கொள்ள முடியாமலும் தவித்த அந்த பெண் எழுந்து வேறு இருக்கைக்கு செல்ல முயன்றார். ஆனால், அவருக்கு வழிவிடாமல் கிண்டல் செய்துள்ளார்.

உடனே அந்த பெண், நடத்துநரை அழைத்து, “இவரை (எஸ்.எஸ்.ஐ.யை) வேறு இருக்கைக்கு போகச் சொல்லுங் கள், இல்லாவிட்டால், எனக்கு வழிவிடச் சொல்லுங்கள்’’ எனத் தெரிவித்தார்.

சக பயணிகள் கண்டிப்பு

ஆனால், நடத்துநர் அவரை தட்டிக் கேட்கத் தயங்கி, அப்பெண் கூறியதை கண்டுகொள்ளாமல் சென்றார். இதனால் எஸ்.எஸ்.ஐ. யின் தொந்தரவு தாங்க முடியாமல் அந்த பெண் தவித்தார். இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டி ருந்த சக பயணிகள் ஒரு கட்டத் தில் ஆவேசமடைந்து அந்த பெண் ணுக்கு வழிவிடுமாறு எஸ்.எஸ்.ஐ.யை கண்டித்துள்ளனர்.

நிலைமை விபரீதம் ஆவதை அறிந்த எஸ்.எஸ்.ஐ. போதையில் தள்ளாடியபடி எழுந்துநின்று, “என்னை மன்னித்துக் கொள்ளுங் கள்” என்றார்.

இந்த சம்பவம் முழுவதை யும், பின்னால் அமர்ந்திருந்த ஒரு பயணி கைபேசியில் வீடியோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிட் டார். இதைப் பார்த்த பல லட்சம் பேர், மற்றவர்களுக்கும் பகிர்ந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் கேட்டபோது, “வீடியோ ஆதாரத்தை வைத்து எஸ்.எஸ்.ஐ.யிடம் துறை ரீதியான விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனிடையே எஸ்.எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள் ளார்.

சமூக வலைதளங்கள்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

இந்த வீடியோவால், அந்த எஸ்.எஸ்.ஐ.க்கு பெரும் அவமானம் என்றாலும், இந்த சம்பவத்துக்கு துளியும் தொடர்பில்லாத அந்த எஸ்.எஸ்.ஐ.யின் குடும்பத்தினர், உறவினர்கள், அத்துமீறலால் ஆளான பெண், அவரது குடும்பத் தினர் எவ்வளவு மன உளைச் சலுக்கு ஆளாகுவர். இது பரபரப்புக்காகவும், சுவாரசியத்துக் காகவும் இதுபோன்ற வீடியோவை வெளியிடுபவர்களுக்கும், பகிர்பவர்களுக்கும் தெரி வதில்லை.

சட்டப்படி நடவடிக்கை

ஒரு தவறு நடந்தால் அதற்கு சட்டரீதியான நடவடிக்கைக்கு எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன.

போலீஸில் புகார் அளிக்கா மல், சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்வோர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x