

தனது 92-வது பிறந்த நாளையொட்டி வரும் ஜூன் 3-ம் தேதி கட்சி தொண்டர் களை திமுக தலைவர் கருணாநிதி சந்திக்கிறார்.
ஜூன் 3-ம் தேதி காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், 7.15 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
காலை 9 மணி முதல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத் தில் உள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங் கேற்கிறார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க வுள்ளனர்.
கருணாநிதியின் பிறந்த நாளை முன் னிட்டு பொதுக் கூட்டம், கருத்தரங்கம், உதவிப் பொருள்கள் வழங்கும் விழா, விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.