நீலகிரியில் மரம் விழுந்து பலியான தேயிலை தொழிலாளிகள் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி
நீலகிரியில் ஆலமரம் சாய்ந்து விழுந்ததில் பலியான தேயிலை தொழிலாளர்கள் ஜானகி, மகேஸ்வரி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர்ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் 3-வது சரகத்தில் 8.5.2014 அன்று காற்றுடன் பலத்த மழை பெய்த போது ஆலமரம் சாய்ந்து விழுந்ததில், அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருமதி ஜானகி, திருமதி மகேஸ்வரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜானகி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த ஜானகி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த சீதாலட்சுமிக்கு 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது
நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது". இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
