நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டை இலவசமாக வழங்க அரசாணை

அறங்காவலர்களிடம் முதல்வர் வழங்கினார்
நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளைக் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை, முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா தலைமை சாஹிம அறங்காவலர் எச்.ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் வழங்கினார். அமைச்சர்கள்ஷாஜகான், முகமது பர்வேஸ், ரஞ்சித்குமார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர்நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளைக் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை, முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா தலைமை சாஹிம அறங்காவலர் எச்.ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் வழங்கினார். அமைச்சர்கள்ஷாஜகான், முகமது பர்வேஸ், ரஞ்சித்குமார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர்நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

Updated on: 
1 min read

சென்னை: நாகூர் தர்கா சந்​தனக்​கூடு திரு​விழாவுக்​காக 45 கிலோ சந்​தனக்​கட்​டைகளை இல​வச​மாக வழங்​கும் அரசாணையை நாகூர் தர்கா அறங்​காவலர்​களிடம் முதல்​வர் விஜய் நேற்று வழங்​கினார்.

நாகூர் தர்கா பெரிய ஆண்​ட​வர் கந்​தூரி சந்​தனக்​கூடு திரு​விழா ஒவ்​வொரு ஆண்​டும் வெகு​விமரிசையாக நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டுக்​கான புகழ்​பெற்ற நாகூர் தர்கா சந்​தனக்​கூடு திரு​விழா வரும் நவ.10-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது.

விழா​வின் முக்​கிய நிகழ்​வாகச் சந்​தனக் கூடுகள் ஊர்​வலமாக எடுத்​துச் செல்​லப்​படும் ஊர்​வலமாகக் கொண்டு வரப்​படும் சந்​தனம் ஆண்​ட​வரின் புனித சமாதி​யில் பூசப்​பட்டு சிறப்பு வழிபாடு நடத்​தப்​படு​கிறது. இவ்​விழா​வில் மத வேறு​பாடின்றி லட்​சக்​கணக்​கான மக்​கள் கலந்து கொள்​வர்.

இவ்​விழாவுக்கு தேவை​யான சந்​தன கட்​டைகளை வழங்​குமாறு தர்கா நிர்​வாகம் சார்​பில் அரசிடம் கோரப்​பட்​டது. அதைத் தொடர்ந்து 45 கிலோ 2-ம் தர சந்​தனக் கட்​டைகளை இல​வச​மாக வழங்​குமாறு வனத்​துறை தலை​வர், அரசுக்கு பரிந்​துரை செய்​தார். அதை கவனமுடன் பரிசீலித்த சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை செயலர் காகர்லா உஷா, 45 கிலோ சந்​தனக்​கட்​டைகளை தர்கா நிர்​வாகத்​துக்கு வழங்க உத்​தர​விட்​டார்.

இந்த சந்​தனக்​கட்​டைகளை, இந்​நிகழ்​வுக்கு மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும் என்ற நிபந்​தனையை அரசு விதித்​துள்​ளது. இந்த அரசாணையை முதல்​வர் விஜய் நாகூர் தர்கா தலைமை அறங்​காவலர் எச்.ஹாஜா நஜிமுதீனிடம் வழங்​கினார். அப்​போது சிறு​பான்மை நலத்​துறை அமைச்​சர் அ.மு.ஷாஜகான், தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் ஜா.முகமது பர்​வேஸ், வனத்​துறை அமைச்​சர் ஆர்.வீ.ரஞ்​சித்​குமார், தமிழ்​நாடு வக்ஃப் வாரிய தலை​வர் கே.நவாஸ் கனி ஆகியோர் உடனிருந்​தனர்.

<div class="paragraphs"><p>நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளைக் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை, முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா தலைமை சாஹிம அறங்காவலர் எச்.ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் வழங்கினார். அமைச்சர்கள்ஷாஜகான், முகமது பர்வேஸ், ரஞ்சித்குமார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர்நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.</p></div>
‘தேசவிரோத கருத்துகளை பரப்பக் கூடாது’ - டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in