

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல் வர் ஜெயலலிதா இன்று வாக்கு சேகரிக்கிறார். அவருக்கு சிறப் பான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூ னிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி உள் ளிட்ட 27 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிற்பகல் 3 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, வடக்கு கடற்கரை வழியாக ஆர்.கே.நகர் செல்கிறார். எம்ஜிஆர் சிலை பெட்ரோல் பங்க் அருகில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு சந்திப்பு, அருணாசலேஸ்வரர் கோயில் ரோடு வழியாக வேனில் சென்று வாக்கு சேகரிக்கும் ஜெய லலிதா, திருவொற்றியூர் நெடுஞ் சாலை சந்திப்பில் மக்களிடம் ஆதரவு கேட்டு பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து வைத்திய நாதன் சாலை, வைத்தியநாதன் பாலம் வழியாக சென்று, எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் உரையாற்றுகிறார். அங்கிருந்து எண்ணூர் நெடுஞ்சாலை (ரயில்வே கிராசிங்), மணலி சாலை, எழில் நகர் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். பிரச்சாரத்துக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
முதல்வர் வருவதையொட்டி ஆர்.கே.நகர் தொகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் பல இடங்களிலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை போயஸ் தோட்டம் முதல் ஆர்.கே.நகர் வரையில் போலீஸார் ஒத்திகை நடத்தினர்.