

கோவை மகளிர் ஐடிஐயில் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே அரசு மகளிர் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய இரண்டு தொழிற்பிரிவுகளும், ஃபேஷன் டெக்னாலஜி, சிஓபிஓ, டிடிபிஓ மற்றும் சிஎச்என்எம் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சூயிங் டெக்னாலஜி என்ற ஓராண்டு தொழிற்பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சிக்கான கட்டணம் இல்லை. பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
மகளிர் ஐடிஐயில் சேர்ந்து படிக்கும் அனைத்து மாணவியருக்கும் மாதம் தலா ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை (2 செட்), காலணி, விலையில்லா பாடப்புத்தகங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். 30 கி.மீ. தொலைவு வரை இலவசப் பேருந்து அட்டை வழங்கப்படும். பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்முகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசிநாள் 10.06.2015. விவரங்களுக்கு: 0422-2645778, 8122047178, 8220011559, 9865128182 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.