4,362 காலியிடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி: பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

4,362 காலியிடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி: பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு
Updated on
1 min read

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் (லேப் அசிஸ்டென்ட்) பணிக் கான தேர்வு மே 31-ம் தேதி நடை பெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்திலிருந்து (>www.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் “Lab Assistant Screen Test Exam Hall Ticket Download” என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் திரையில் தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு டவுன் லோடு என்பதை க்ளிக் செய்தால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதி விறக்கம் ஆகும். அதை பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

ஆய்வக உதவியாளர் பணியில் 4,362 காலியிடங்களுக்கு 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in