

முதன்மை விளையாட்டு மையத் தில், வாள்சண்டை விளையாட்டு பிரிவில் காலியாக உள்ள இடங் களுக்கு மாவட்ட விளையாட்ட ரங்கில் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன.
சென்னையில் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில், வாள்சண்டை விளையாட்டு பிரிவில் காலியாக உள்ள இடங் களுக்கு 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர். இதற் காக, காஞ்சிபுரம் மாவட்ட விளை யாட்டரங்கில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், 6-ம் வகுப்பு மாண வர்களுக்கான பிரிவில் சேர 5-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2003-ம் ஆண்டு பிறந்தவராக இருத்தல் வேண்டும். 7-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் சேர 6-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2002-ம் ஆண்டு பிறந்தவராக இருத்தல் வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2001-ம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
மேற்கூறிய தகுதியுள்ளவர்கள், மாவட்ட விளையாட்டரங்கில் விண் ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து 15-ம் தேதி அன்று காலை 7 மணிக்கு மேலாளர், முதன்மை நிலை விளையாட்டு மையம், அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரிய மேடு, சென்னை-600003 என்ற முகவரியில் நேரில் அளிக்க வேண்டும்.
உயரமானவர்களுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் விருது பெற்ற வர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும். உணவு, தங்குமிடம், விளை யாட்டு சீருடை, விளையாட்டு பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எந்த காரணத் தாலும் இடையில் வெளியேறினால் நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் கணக்கிட்டு பணம் திரும்ப செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மாநில அளவில் தேர்வு நடத்தப்பட உள்ளது.