

ஆவின் நிர்வாகம் நிரந்தரமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும் பாலின் அளவை குறைக்கக் கூடாது என்பதை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது.
தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனம் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால்வளத்துறை அமைச்சர் ரமணாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் பாலின் அளவை எந்த அளவிலும் குறைக்கக் கூடாது. அவர்களிடம் கொடுக்கும் பாலை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
''நீண்டகாலமாக ஆவின் நிர்வாகத்துப் பால் வழங்கும் பாலின் அளவை குறைக்கப்போவதில்லை. பால் உற்பத்தியாளர்களிடம் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்படும். தனியாரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படாது'' என்று அமைச்சர் ரமணா உறுதியளித்தார்.