

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்று லாத் தலங்களில் திறந்த தள சிறப்பு சுற்றுலாப் பேருந்துகள் இயக் கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் சுற்றுலா தலங் களில் மேலே செல்லும் மின்சார கம்பிகள் இடையூறாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இத்தகைய பேருந்துகள் இயக்கப் படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய அளவில் சுற்றுலா துறை வளர்ச்சியில் தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் 24 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்தனர். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி சுற்றுலாத் துறையில் தமிழகத்தை நாட்டிலேயே முதலிடத்துக்கு கொண்டுவர பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திறந்த தள பேருந்துகள்
இதில் முக்கியமாக சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலை களை மேம்படுத்துவது, சுற்றுலாத் தலங்களில் ஆடியோ வழிகாட்டி களை இடம்பெறச் செய்வது உள்ளிட்ட பல திட்டங்கள் கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டன. அவற்றில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும் தெரிவிக் கப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் புதிதாக திறந்த தள சிறப்பு சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சி, மதுரையில்..
தமிழகத்தில் ஊட்டி, கொடைக் கானல், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கே அதிகளவில் சுற்றுலா செல்கிறார்கள். அவர்களை மற்ற பகுதிகளுக்கும் கவர்ந்திழுக்கும் வகையில் மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும், தலைநகர் சென்னையிலும் இந்த திறந்த தள சிறப்பு சுற்றுலாப் பேருந்து கள் இயக்கப்பட இருந்தன.
தற்காலிக நிறுத்தம்?
திறந்த தள சுற்றுலாப் பேருந்து களில் மேல்தளம் திறந்தபடியே இருக்கும். அதில் அமர்ந்து பயணிக்கும்போது நகரின் அழகை மேலிருந்தபடி பார்த்து ரசித்துக் கொண்டே பயணம் செய்யலாம். இந்த வகை பேருந்துகள் ஏற் கெனவே பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இதுவரை இயக்கப்பட்டது இல்லை. எனவே இந்த பேருந்துகள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உண்டானது.
மின்கம்பிகள் இடையூறு
இது தொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “திறந்த தள பேருந்துகள் குறித்து அறிவிக்கப்பட்டபோதே அதுபற்றி போக்குவரத்துத் துறை யுடன் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த பேருந்து களை இயக்குவது குறித்து அந்தந்த நகரங்களில் சோதனை செய்தபோது, பெரும்பாலான பகுதி களில் மின்கம்பிகள் மேலே போவ தால் அவை திறந்த தள பேருந்து களில் உரசும் என்று கண்டறியப்பட் டது. எனவே அந்த பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் இதற்கு மாற்றாக வேறொரு திட்டம் கொண்டு வரப்படும்” என்றனர்.