தனியார் மின் கொள்முதல் அடுத்த 30 ஆண்டில் ரூ.3,200 கோடி இழப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு

தனியார் மின் கொள்முதல் அடுத்த 30 ஆண்டில் ரூ.3,200 கோடி இழப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஸ்பிக் மின்சக்திக் கழகம் என்ற நிறுவனத்தின் சார்பில் தூத்துக் குடியில் ரூ.1,536 கோடியில் 525 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கவும், அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற் பனை செய்யவும் கடந்த 1995-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனம் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. அதன்பின் 17 ஆண்டுகள் கழித்து கடந்த 2012-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத் துடன் திருத்தப்பட்ட மின்கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அப் போது மின்திட்டத்துக்கான செலவு ரூ.2,833 கோடியாக அதிகரிக்கப் பட்டது. அதன்பிறகும் திட்டப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், திட்டச்செலவை கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.3,265 கோடியாகவும், ஏப்ரல் மாதத்தில் ரூ.3,970 கோடி யாகவும் ஸ்பிக் நிறுவனம் தன்னிச்சையாக அதிகரித்தது.

ஸ்பிக் மின்சக்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத் துக்கு யூனிட்டுக்கு ரூ.1.83 வீதம் நிரந்தர விலை கொடுத்தாக வேண்டும். ஸ்பிக் நிறுவனத்துக்கு யூனிட்டுக்கு 45 பைசா வீதம் கூடுதல் நிரந்தர விலை வழங்கப்படுவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அடுத்த 30 ஆண்டுகளில் ரூ.3,200 கோடி இழப்பு ஏற்படும். இது மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில்தான் சுமத்தப்படும். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in