மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6 லட்சம் நலத் திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6 லட்சம் நலத் திட்ட உதவிகள்
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் 126 பேருக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில், மாவட்ட ஆட்சியர் சண்முகம் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

6 பேருக்கு மோட்டார் பொருத் திய மூன்று சக்கர வாகனம், 12 பேருக்கு செயற்கை அவயங்கள் மற்றும் காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, காலிப்பர் கருவி என மொத்தம் 126 பேருக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் சோமசுந்தரம், கணேசன், பெருமாள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முத்துமீனாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் சண்முகம் வழங்கினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in