ரூ.134 கோடி குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுரை

ரூ.134 கோடி குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுரை
Updated on
1 min read

தமிழகத்தில் கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.134.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 11 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளின் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டம் குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:

சென்னையில் ஜூலை மாதம் வரை நாளொன்றுக்கு 580 மில்லியன் லிட்டர் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க போதிய நீர் இருப்பு உள்ளதை அமைச்சர் உறுதிசெய்தார். தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியன மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.134.13 கோடி மதிப்பிலான 8,626 குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார். அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் மின் மோட்டார்களும் பழுது நீக்கப்பட வேண்டும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீரில் குளோரின் சரியான அளவில் கலக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், விடுமுறை நாட்களிலும் குடிநீர் வழங்கல் பணி தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் விஜய ராஜ் குமார், அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in