Published : 27 May 2015 07:24 AM
Last Updated : 27 May 2015 07:24 AM

திருவான்மியூர், கொடுங்கையூர், புழலில் 3 வீடுகளில் 98 பவுன் திருட்டு: கோயிலில் அம்மன் தாலியும் பறிபோனது

திருவான்மியூர், கொடுங்கையூர், புழல் பகுதிகளில் 3 வீடுகளில் 98 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

சென்னை திருவான்மியூர் கலா க்ஷேத்ரா காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராமலிங் கம்(36). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்றார். இரவில் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அறையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதி லிருந்த 32 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் களும் திருடப்பட்டிருந்தன.

சென்னை கொடுங்கையூர் சுப்பிரமணியன் தோட்டம் பிரதான சாலையில் வசிப்பவர் ஸ்ரீகுமார். ஜவுளி மொத்த வியாபாரி. இவரது மனைவி ஸ்ரீவாணி. மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார். ஸ்ரீகுமார் வியாபாரம் விஷயமாக சேலம் சென்று விட்டார். ஸ்ரீவாணி மகனுடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஸ்ரீகுமாரின் தம்பி மகன் விஷ்ணு நேற்று காலையில் ஸ்ரீகுமாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். சந்தேகம் அடைந்த அவர் கதவை திறக்க முயன்றார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் பின்பக்கமாக விஷ்ணு சென்று பார்த்தபோது பின் கதவு திறந்து கிடந்தது. நகை வைத்திருந்த பெட்டிகள் வெளியில் சிதறிக் கிடந்தன.

புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீஸார் விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். முதல்கட்ட விசா ரணையில் 50 பவுன் நகை, பல லட்சம் வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் திருடுபோயிருப்ப தாக தெரியவந்துள்ளது. ஸ்ரீகுமார் வந்தால்தான் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு, விவரம் தெரியவரும்.

கோயிலில் கைவரிசை

கொருக்குப்பேட்டை திருநாவுக் கரசு தோட்டத்தில் லட்சுமியம்மன் கோயில் உள்ளது. இங்கு வீணை நாதன் என்பவர் பூசாரியாக இருக் கிறார். இவர் நேற்று காலையில் கோயிலை திறக்கச் சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயின் திருடப் பட்டிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து கொருக்குப் பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர்

புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவில் வசிப்பவர் ஈஸ்வரன். டாஸ்மாக் ஊழியர். இவர் கடந்த திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மணலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x