

ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத் தப்படும். சென்னை மற்றும் புற நகரில் ஆவின் பால் மொத்த விற்பனையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.
சென்னை அம்பத்துார் பால் பண்ணை வளாகத்தில் புதியதாக நிறுவப்பட்டு வரும் பால்பொருட்கள் பண்ணையில் நடந்து வரும் இறுதிக் கட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 2-ம் வெண்மை புரட்சியை ஏற்படுத்த பால்வளத் துறை பல்வேறு மேம்பாட்டுத் திட் டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தற்போது ஆவின் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 30.05 லட்சம் லிட்டராக உயர்ந்து சரித்திர சாதனை படைத்துள்ளது. நுகர்வோருக்கு தரமான பால் உப பொருட்களை வழங்க ரூ.32.40 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பால் உபபொருட்கள் தயா ரிக்கும் பண்ணை இந்தாண்டு செப் டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும். இந்த பண்ணை செயல் பாட்டுக்கு வந்தால் ஆவின் நிறு வனத்தின் தயாரிப்புத்திறன் ஐஸ் கிரீம் தயாரிப்பு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டரில் இருந்து 15ஆயிரம் லிட்டராகவும் பனீர் 100லிருந்து 1000 கிலோவாகவும் தயிர் பாக்கெட் 7 ஆயிரத்தில் இருந்து 60ஆயிரமாக வும் லஸ்சி பாக்கெட் 4 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும் புரோப யோடிக் லஸ்சி கப் 3 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும் மோர் பாக்கெட் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாகவும் உயரும்.
இதன் மூலம் ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். பால் உப பொருட் கள் பண்ணையின் உற்பத்தி திறன் தற்போதைய அளவான நாள் ஒன்றுக்கு 7500 லிட்டர் என்ற அளவில் இருந்து 68 ஆயிரம் லிட்டர் என 9 மடங்கு உயரும். ஐஸ்கிரீம் பொருட்களை அதன் தரம் குன்றாமல் எடுத்துச் செல்ல ஏதுவாக குளிர்பதன வசதி கொண்ட வாகனங்களை ரூ.5 கோடி செலவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பத்துார் பால்பண்ணையில் பால் பாக்கெட் தயாரித்து குளிர்விக்கும் சேமிப்பு அறையின் கொள்ளளவை 3.5 லட்சம் லிட்டரில் இருந்து 5 லட்சம் லிட்டராக அதிகரிக்க ரூ.6.17 கோடி செலவில் பணிகள் நடக்கின்றன. ஆவின் பால் விற்பனையை அதி கரிக்க நுகர்வோருக்கு உடனடி யாக பால் அட்டைகள் வழங்கப் பட்டு வருகிறது. சமையல் கலைஞர் களுக்கு தனியாக ஒரு பிரிவு ஏற் படுத்தி அவர்களுக்கு தேவையான ஆவின் பாலை அவர்கள் இடத்திலேயே வழங்கி வருகிறது. அவர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் உணவக உரிமையாளர்களை அழைத்து அவர்களையும் ஆவின் பால் வாங்கி பயன்படுத்த கேட்டுக் கொள்ள கூட்டம் நடத்தப்படும். சென்னை மற்றும் புறநகரில் தற்போதுள்ள பால் மொத்த விற்பனையாளர்கள் எண்ணிக் கையை மேலும் அதிகரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ரமணா கூறினார்.
ஆய்வின் போது பால்வளத் துறை செயலர் விஜயகுமார் மற்றும் ஆவின் நிர்வாக அதிகாரிகள் உடன் இருந்தனர்.