புதுச்சேரி அருகே கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

புதுச்சேரி அருகே கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
Updated on
1 min read

புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் மீனவ கிராமத் தைச் சேர்ந்தவர் சேதுமாதவன் (40). மீனவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக மீனவர்களான செல்வநாதன், தர்மலிங்கம், சேகர் ஆகியே ாருடன் நேற்று அதிகாலை மீன்பிடிக்கச் கடலுக்குச் சென்றார்.

சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது படகு இயந்திரம் பழுதாகி திடீரென நின்றது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்கள் உடனே அவசர உதவிக்கான 1093 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உதவி கேட்டனர். கடலோர காவல் படை சப்இன்ஸ்பெக்டர் பிரவீன் தலைமையில் போலீஸார் மீட்பு படகில் விரைந்து சென்று கடலில் தத்தளித்த மீனவர்க ளையும் படகையும் மீட்டு தேங்காய்த்திட்டு துறைமுக பகுதிக்கு கொண்டு வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in