தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் அறிவியலில் அதிகம் பேர் 100-க்கு 100: ஆசிரியர்கள் கருத்து

தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் அறிவியலில் அதிகம் பேர் 100-க்கு 100: ஆசிரியர்கள் கருத்து
Updated on
1 min read

எஸ்எஸ்எல்சி அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் அப்பாடத்தில் அதிகம்பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

அறிவியல் பாடத்தில் செய் முறை தேர்வுக்கு 25 மதிப்பெண், தியரி (கருத்தியல்) தேர்வுக்கு 75 மதிப்பெண். செய்முறைத் தேர்வில் மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைத்துவிடும். 10-ம் வகுப்பில் மற்ற பாடங்களுக்கு செய்முறைத்தேர்வு கிடையாது.

தியரி தேர்வைப் பொருத்த வரையில், இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அனைத்துக் கேள்விகளும் பாடப் புத்தகத்தின் கடைசியில் இடம் பெறும் வினாக்களில் இருந்தே கேட்கப்பட்டன. இதன் காரண மாக, அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 எடுத்தவர்களின் எண்ணிக் கையும், தேர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, ஆசிரியர் களில் இன்னொரு தரப்பினர் கூறும்போது, “இதுபோன்று வினாக்கள் எளிதாக கேட்கப்பட்டால் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவது ஒன்றும் கடினம் அல்ல. ஆனால், இத்தகைய மாணவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியே செல்லும்போது, ஐஐடி உள்ளிட்ட மைய நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கடினம். எளிதாக கேள்விகள் கேட்டு லட்சக் கணக்கானோர் 100-க்கு 100 வாங்கி விடுவதால் அதிக மதிப்பெண்ணின் முக்கியத்துவம் குறைந்து போகும்” என்று விமர்சித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in