

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24-வது நினைவு நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸார் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அங்கு இளங்கோவன் பேசிய தாவது: தீவிரவாதமும், பயங்கர வாதமும் எந்த உருவத்தில் வந்தா லும் காங்கிரஸ் அதை பலமாக எதிர்க்கும். தற்போது உலகெங்கும் சாதாரண மக்களுக்கும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் பெரும் சவா லாக உள்ளது. இதை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒழிக்க வேண்டும்.
பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததால், ஜாலியாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் செய்த சாதனைகள் ஏராளம்.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற விரும்பி, ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வந்து தனது உயிரை நீத்த ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற இந்த நாளில் நாம் சபதம் ஏற்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, திருநா வுக்கரசு, சட்டப்பேரவை உறுப் பினர் விஜயதரணி, யசோதா, வசந்தகுமார், ஜெயகுமார், செல்வப்பெருந்தகை, ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ராஜீவ் நினைவு ஜோதி..
கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் பிரகாசம், பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜீவ் நினைவு ஜோதி கொண்டு வரப்பட்டது. இந்த ஜோதி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சமாதியில் ஆகஸ்ட் 20-ம் தேதி ஒப்படைக்கப் படவுள்ளது.