

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்கிழமை) காலை தனது இல்லத்துக்கு வந்து தன்னை சந்தித்தது ஆச்சர்யம் அளித்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை சுப்பிரமணியன் சுவாமிக்கு அவர் வழங்கினார். திருமண அழைப்பிதழை அளிக்கும் பொருட்டு ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை அவரது வீட்டில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், "இன்று காலை எனது சென்னை இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அவரது வருகை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது குடும்ப உறுப்பினர் திருமண அழைப்பிதல் கொடுப்பதற்காக என் வீட்டுக்கு வந்திருந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.