

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தி நேற்றுடன் முடிவ டைந்தது. இதில், பல்வேறு கோரிக் கைகள் தொடர்பாக கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட 3,083 மனுக்களில், 214 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில், 1,424 பசலிக்கான ஜமாபந்தி கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 9 குறுவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள், பட்டா, சிட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, ஜமாபந்தியில் 3,083 மனுக்களை அளித்தனர். இவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் 214 மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 2,869 மனுக்களை விசாரித்து தீர்வு காணப்பட உள்ளது. கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த ஜமாபந்தி நேற்றுடன் நிறைவுபெற்றது.
இதேபோல், செய்யூர் வட்டத் திலும் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவுபெற்றது.