

்மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில், தனியார் விடுதி ஒன்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக புகார் எழுந்து ள்ளது. வருவாய்த் துறை அதிகாரி களும், பேரூராட்சி அதிகாரிகளும் இது தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல என்று கூறி தட்டிக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டப் படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரம் கடற்கரை கோயில் அருகே அதிமுக பிரமுகருக்கு சொந்த மான தனியார் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதி வளாகத்தின் கிழக்கு எல்லையில், கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, கடற்கரையை ஆக்கி ரமித்து தடுப்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனால், இயற்கை சீற்றத்தின்போது, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப் பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, தொல்லியல் மற்றும் வருவாய்த் துறையினர் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட தனியார் விடுதி குழாய் தடுப்புகளை அமைக்க தடை விதித்தனர். அரசு மற்றும் தனியார் நிலங்களை அளவீடு செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற 15 நாட்கள் கெடுவும் விதித்தனர். எனினும், ஆக்கிரமிப்புகள் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளன.
இதுகுறித்து, மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறியதாவது: இந்த ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், மற்ற பகுதிகளில் உள்ள விடுதி மற்றும் குடியிருப்பு வாசிகளும் கடற்கரையை ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது. அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிப்பு என உறுதி செய்யப்பட்டு, அதை அகற்ற 2 முறை நோட்டீஸ் அளித்தும், எந்த மாற்றமும் இல்லை. இதில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர் செல்வத் திடம் கேட்டபோது, ‘சம்பந்தப் பட்ட விடுதி உரிமையா ளருக்கு வருவாய்த்துறை, தொல்லியல் துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உள்ளூர் பேரூராட்சி நிர்வாகம்தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: பேரூராட்சி பகுதியெ ன்றால், நாங்கள் நிச்சயம் நடவடிக்கை மேற்கொண்டி ருப்போம். ஆனால், கடற்கரை என்பதால் எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதனால், வருவாய்த் துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறிய தாவது: செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் விசாரித்து ஒருசில நாட்களில் ஆக்கிரமிப் புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.