மேகேதாட்டு பிரச்சினையில் சித்தராமையாவை சந்திக்காதது ஏன்? பாமகவுக்கு திண்டிவனம் ராமமூர்த்தி கேள்வி

மேகேதாட்டு பிரச்சினையில் சித்தராமையாவை சந்திக்காதது ஏன்? பாமகவுக்கு திண்டிவனம் ராமமூர்த்தி கேள்வி
Updated on
1 min read

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்தித்து மனு அளித்த பாமக, மேகேதாட்டு பிரச்சினையில் அப்படி செய்யாதது ஏன் என்று தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு மிகவும் தெளிவானவது. இந்த தீர்ப்பால் தமிழகமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. திமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் மட்டும் தீர்ப்பை குறை கூறி வருகிறார்கள். தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டல் பகுதி என்பது தீர்ப்பின் 5 சதவீதம்தான். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை முழுதாக படிக்க வேண்டும்.

தங்களுக்கும் செல்வாக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பாமக மனு அளித்துள்ளது. மேகேதாட்டு பிரச்சினையில் சித்தராமையாவை பாமக சந்திக்காதது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in