ஆந்த்ராக்ஸ் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

ஆந்த்ராக்ஸ் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம், ஆசனூர் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. கோடை வெப்பம் மற்றும் பருவமழை தாக்கம் காரணமாக நோய் தாக்கி யானைகள் இறப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆசனூர் வனப் பகுதி நீரோடையில் 20 வயதுடைய ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறைக்குத் தக வல் வந்தது. இதையடுத்து, ஆச னூர் வனச்சரக அலுவலர் பழனிச் சாமி மற்றும் வனத் துறையினர் அங்குச் சென்று உயிரிழந்த யானையை பார்த்தனர்.

ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் சி.ஹெச்.பத்மா முன்னிலையில் கால்நடை மருத்துவர் சி.மனோகரன், பரி சோதனை செய்தார். பரிசோத னையில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி யானை உயிரிழந்தது தெரிந்தது. யானையின் உடலை வனத் துறை யினர் அதே இடத்தில் எரியூட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in