ஜெ. வழக்கில் மேல்முறையீடு: மே 25-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

ஜெ. வழக்கில் மேல்முறையீடு: மே 25-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
Updated on
1 min read

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி, வருகிற 25-ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி தேர்தலில் திமுக போட்டியிடுமா?

அதைப் பற்றியெல்லாம் இன்னும் சிந்திக்கவே இல்லை. தமிழக ஜனநாயகத்தில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் தெரிவிக்கவும் இல்லை. அறிவிக்கவும் இல்லை. தெரிந்துகொள்கிற வாய்ப்பும் நமக்கு இல்லை.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை கர்நாடக அரசு தாமதம் செய்து வருகிறதே?

அப்படி தாமதம் செய்து வருவது உண்மையானால், அதற்கு ஜெயலலிதாதான் காரணமாக இருக்கக்கூடும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறை யீடு செய்யுமா?

வருகிற 25-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், இதைப் பற்றியெல்லாம் நன்கு யோசித்து, முடிவெடுத்து அறிவிக்கப்படும். மேற்கண்டவாறு கருணாநிதி பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in