கருணாநிதி-கிருஷ்ணசாமி சந்திப்பு: தமிழக பிரச்சினைகளுக்காக புதிய கூட்டமைப்பு தொடக்கமா?

கருணாநிதி-கிருஷ்ணசாமி சந்திப்பு: தமிழக பிரச்சினைகளுக்காக புதிய கூட்டமைப்பு தொடக்கமா?
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

அதன்பிறகு நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:

மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை சந்தித்து தமிழகத் தின் முக்கிய பிரச்சினைகள், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். காவிரி, முல்லை பெரி யாறு பிரச்சினைகள், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை என அண்டை மாநிலங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தமிழக அரசின் செயலற்ற தன்மையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக இருவரும் விவாதித்தோம்.

ஈழத் தமிழர்களுக்காக ‘டெசோ’ அமைப்பு உள்ளது. அதுபோல தமிழக பிரச்சினைகளுக்காக அரசியலை மறந்து இணைந்து செயல்பட புதிய கூட்டமைப்பு தொடங்குவது குறித்தும் பேசினோம். தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. அதுகுறித்து தேர்தல் நேரத்தில் பேசுவதுதான் சரியாக இருக்கும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

விஜயகாந்த் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து கேட்டபோது, ‘‘தமிழர் பிரச்சினை களுக்காக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் யார் ஈடுபட்டாலும் வரவேற்கத் தக்கதே’’ என்றார் கிருஷ்ணசாமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in